Thursday 11 December 2014

ஒரே ஒரு கேள்விதான்னே கேட்டேன்

ஒரே ஒரு கேள்விதான்னே கேட்டேன் அதுக்கு போய் இப்ப ஒழுங்கா போறியா இல்லை சுடுதண்ணியை மூஞ்சுல ஊத்தவா அப்படிங்கறார் அந்த டீக்கடைகாரர்.
அப்படி என்னதாண்டா கேட்ட??
பால் விலை பத்து ரூபாய்தானே ஏறிருக்கு ? நீங்க டீ இரண்டு ரூபா ஏத்திருகிங்க- அப்ப ஒரு லிட்டர் பாலுக்கு தண்ணி எதுவும் ஊத்தாம அஞ்சு டீதான் போடுறீங்களா. அப்படின்னு கேட்டேன்.
தம்பி!!!!!! பால் விலை மட்டும் இல்லைடா சர்க்கரை விலையும் ஏறிருக்குடா, அதுவும் காரணமாய் இருக்கலாமில்லை.
நீங்க சொல்லுறது சரிண்ணே , ஒரு கிலோவுக்கு 5 ரூபா ஏறிருக்கு , ஆனா இவங்க ஒரு டீக்கு அதிகமே 5 கிராம் சர்க்கரை தான் போடுறாங்க , 5 கிராமுக்கு அதிகமா 20 பைசா கூட வாங்கலாம் , இதுல பாதி பேரு எனக்கு சுகரு '' சர்க்கரை இல்லாம டீ போடு '' இல்லைன்னா சர்க்கரை கம்மியா ஓர் டீ போடு அப்படின்னு சொல்லுறாங்க - இதெல்லாம் கணக்கு போட்டா சர்க்கரைக்கு 10 பைசா தான்னே ஏத்தி இருக்கனும் ...
என்னதான் கொள்ளை கணக்கு போட்டாலும் - ஓர் டீக்கு 50 பைசா மேல விலை கூட வைக்கலாம் - ஆனால் இவங்க 2 ரூபா போட்டு 1.50 எக்ஸ்ட்ரா கொள்ளை அடிக்கிறாங்க ..
நீ சொல்லுறது ஓரளவுக்க சரி - ஆனால் கேஸ் சிலிண்டெர் விலை ஏறிருக்கு , அதை நீ பார்க்கணும் இல்லை ?
போங்கண்ணே உங்களுக்கு விசயமே தெரியலை , 6 மாசத்துக்கு முன்னாடி கேஸ் விலை எறிருக்குன்னு அப்பவே ஒரு ரூபாய் டீ விலை ஏத்திட்டாங்க.
இப்ப நான் என்ன செய்யணும் ?
இதுக்கு இன்னிக்கே ஒரு பைசல் பண்ணனும் , வாங்கன்னே டீ கடைகாரன்கிட்ட நியாயம் கேட்க போகலாம்
எதுக்குடா என்மேல சுடுதண்ணி ஊத்தவா ? போய் வேற பொழப்பு இருந்தா பார்க்கலாம் ,
இப்பவும் இந்த விலைவாசி பிரச்சனைல தரமான டீ 7 ரூபாய்க்கு கொடுக்கிற நியாயமான கடை நிறைய இருக்கு . அவங்களை தேடி புடிச்சி அவங்களை ஆதரிக்கலாம் வா

No comments:

Post a Comment