Thursday 11 December 2014

Parking charges at City malls

ஒரே ஒரு கேள்விதான்னே கேட்டேன்

ஒரே ஒரு கேள்விதான்னே கேட்டேன் அதுக்கு போய் இப்ப ஒழுங்கா போறியா இல்லை சுடுதண்ணியை மூஞ்சுல ஊத்தவா அப்படிங்கறார் அந்த டீக்கடைகாரர்.
அப்படி என்னதாண்டா கேட்ட??
பால் விலை பத்து ரூபாய்தானே ஏறிருக்கு ? நீங்க டீ இரண்டு ரூபா ஏத்திருகிங்க- அப்ப ஒரு லிட்டர் பாலுக்கு தண்ணி எதுவும் ஊத்தாம அஞ்சு டீதான் போடுறீங்களா. அப்படின்னு கேட்டேன்.
தம்பி!!!!!! பால் விலை மட்டும் இல்லைடா சர்க்கரை விலையும் ஏறிருக்குடா, அதுவும் காரணமாய் இருக்கலாமில்லை.
நீங்க சொல்லுறது சரிண்ணே , ஒரு கிலோவுக்கு 5 ரூபா ஏறிருக்கு , ஆனா இவங்க ஒரு டீக்கு அதிகமே 5 கிராம் சர்க்கரை தான் போடுறாங்க , 5 கிராமுக்கு அதிகமா 20 பைசா கூட வாங்கலாம் , இதுல பாதி பேரு எனக்கு சுகரு '' சர்க்கரை இல்லாம டீ போடு '' இல்லைன்னா சர்க்கரை கம்மியா ஓர் டீ போடு அப்படின்னு சொல்லுறாங்க - இதெல்லாம் கணக்கு போட்டா சர்க்கரைக்கு 10 பைசா தான்னே ஏத்தி இருக்கனும் ...
என்னதான் கொள்ளை கணக்கு போட்டாலும் - ஓர் டீக்கு 50 பைசா மேல விலை கூட வைக்கலாம் - ஆனால் இவங்க 2 ரூபா போட்டு 1.50 எக்ஸ்ட்ரா கொள்ளை அடிக்கிறாங்க ..
நீ சொல்லுறது ஓரளவுக்க சரி - ஆனால் கேஸ் சிலிண்டெர் விலை ஏறிருக்கு , அதை நீ பார்க்கணும் இல்லை ?
போங்கண்ணே உங்களுக்கு விசயமே தெரியலை , 6 மாசத்துக்கு முன்னாடி கேஸ் விலை எறிருக்குன்னு அப்பவே ஒரு ரூபாய் டீ விலை ஏத்திட்டாங்க.
இப்ப நான் என்ன செய்யணும் ?
இதுக்கு இன்னிக்கே ஒரு பைசல் பண்ணனும் , வாங்கன்னே டீ கடைகாரன்கிட்ட நியாயம் கேட்க போகலாம்
எதுக்குடா என்மேல சுடுதண்ணி ஊத்தவா ? போய் வேற பொழப்பு இருந்தா பார்க்கலாம் ,
இப்பவும் இந்த விலைவாசி பிரச்சனைல தரமான டீ 7 ரூபாய்க்கு கொடுக்கிற நியாயமான கடை நிறைய இருக்கு . அவங்களை தேடி புடிச்சி அவங்களை ஆதரிக்கலாம் வா

1983 - 2014

இதுதான் தற்போதைய உண்மை

இட்லி விலை 14.50, பேகிங் சார்ஜஸ் 9 ரூபாய்....வெளங்கிடும்....
ஒரே ஒரு சந்தேகம் தான்.....

ஏண்டா!!! ஒரு இட்லி 14.50 என்று கேட்டால்? உங்க ரேஞ்சிக்கு எங்கு சென்று உண்ண முடியுமோ, அங்கு செல்லுங்கள் என்பீர்கள், அதுனால் அது கேள்வி இல்லை.

ஒரு தோசை 50 ரூபாயா என்று கேட்டால்? அரிசி என்ன விலை, எண்ணெய் என்ன விலை, தோசை ஊத்துற மாஸ்டருக்கு சம்பளம், திருப்பி போன்ற கரண்டி, தோசை மாவை சரியா சுத்துற குட்டி டபரா, அதுவும் இல்லாமல் உங்களை யார் அழைபிதல் கொடுத்து அழைத்தது என்பீர்கள், அதுனால் அதுவும் கேள்வி இல்லை.

நேற்று மீந்து போன உளுந்து வடையில், இன்று காலை செய்த சாம்பாரில் இரண்டு கரண்டி ஊத்தி, ஊற வைத்து கொடுபதற்கு 70 ஓவா, ஒரு வடை 35 ஓவா.....அடுக்குமாயா.....சரி போய் தொலைகிறது.....

கேள்வி இது தான்: அது என்ன பேக்கிங் சார்ஜஸ், அதுவும் இட்லிக்கு தனி, தோசைக்கு தனி......

நீங்க அட்டைபெட்டியில் போட்டு கொடுத்துவிட்டு, அதற்கும் எங்களிடமே காசை புடுங்குவது என்ன நியாயம்.....ஒருவேளை நாங்கள் டப்பாவில் போட்டு கொடுங்கள் என்று கேட்டால், இவ்வளவு தொகை ஆகும் என்று சொல்லி தானே, தொகையை வசூலிக்க வேண்டும்.....

சீக்கிரம் எதிர்பாருங்கள், வீட்டில் இருந்து தூக்குசட்டியை தூக்கிட்டு ஏதோ உங்களின் ஒரு கிளைக்கு வரேன், அப்பொழுதும் பேக்கிங் சார்ஜஸ் போடுகிறீர்களா என்று பார்கின்றேன்....

Murugan Idli Shop, Murugan Idly Shop, Besant Nagar, Murugan Idli Shop ஒரு இட்லி விலை 14.50, பேகிங் சார்ஜஸ் 9 ரூபாய்....வெளங்கிடும்....பொறுமையாக சம்பாதியுங்கள், உங்கள் வியாபார தந்தரத்தை பார்த்தால் "கொள்ளை" அடிப்பது போல உள்ளது.....